செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (21:48 IST)

ஷங்கர் படத்தில் இணைந்த சூர்யா...ரசிகர்கள் குஷி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா ஷங்கர் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவ வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தை அடுத்து, கமலின் விக்ரம் படத்தில் அவர் ரோலக்ஸ் கேரக்டரில் நடித்திருந்தார்..

இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் வசூலில் சாதனை படைத்தது. இப்படத்தின் அடுத்த பாகத்தில் சூர்யா நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவர் பாலாவின் ''வணங்கான்'', சிறுத்தை சிவாவுடன் ஒரு படம், வெற்றிமாறனுடன் ''வாடிவாசல்'' படத்தில் பிஸியாக இருக்கிறார்.

இந்த நிலையில் ஷங்கர்- ராம்சரண் கூட்டணியில் உருவாகியுள்ள ஆர்சி-15 படத்தின் ஒரு சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இதில், அவர் 10 நிமிடம் காட்சியில்  நடித்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது.