1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 1 ஜனவரி 2019 (08:44 IST)

மோகன்லாலின் காப்பானாக சூர்யா – வெளியானது ’சூர்யா 37’டைட்டில்

சூர்யா, மோகன் லால், ஆர்யா இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டிலை புத்தாண்டை முன்னிட்டு அறிவித்துள்ளது படக்குழு.

சூர்யா- கே.வி. ஆனந்த் இணைந்த முதல் படமான அயன் சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் முக்கியமானப் படமாக அமைந்தது மட்டுமல்லாமல், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும் சூர்யாவிற்கென ஒரு புதிய மார்க்கெட்டை உருவாக்கிக் கொடுத்து அவரைத் தென்னிந்திய நடிகர்களில் முக்கியமானவராக்கியது.

அதையடுத்து இருவரும் இணைந்த படமான மாற்றான் படுதோல்வியடைந்தது. அதனால் இருவரும் மீண்டும் இணையாமல் சிலக்காலம் இடைவெளி எடுத்துக்கொண்டனர். அதன் பின் இருவரும் வேறு வேறு திசைகளில் பயனித்து வந்தனர். ஆனால் இப்போது இருவருமே ஒரு ஹிட் கொடுக்க வேண்டியக் கட்டாயத்தில் உள்ளனர். அதனால் இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

லைகா தயாரிக்கும் இந்த படத்தில் சூரியாவுடன் மோகன்லால், ஆர்யா மற்றும் சாயிஷா சாகல் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தியப் பிரதமரின் காவல் பிரிவின் உயர்நிலை அதிகாரியாக நடிக்கும் சூர்யா, இதில் பிரதமரைக் கொலை செய்ய நடக்கும் திட்டத்தை முறியடித்து எப்படி பிரதமரைக் காக்கிறார் என்பதே கதை. இந்த படத்தில் பிரதமராக மோகன் லால் நடிக்கிறார்.

முடியும் தருவாயில் இருக்கும் இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. பெயர் வைப்பதற்கு ஒரு வித்தியாசமான முறையை அறிவித்தது படக்குழு. இயக்குனர் கே.வி. ஆனந்த். டிவிட்டரில் மீட்பான், காப்பான், உயிர்கா ஆகிய மூன்று தலைப்புகளைக் கொடுத்து, அவற்றிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி கேட்டார்.. பெருவாரியான ரசிகர்கள் தேர்ந்தெடுக்கும் தலைப்பைப் படத்திற்கு வைக்க படக்குழு முடிவு செய்தது. ரசிகர்களும் ஆர்வமாக தலைபைத் தேர்ந்தெடுத்தனர்

அதையடுத்து நேற்று நள்ளிரவு சரியாக 12.10 மணிக்கு 'சூர்யா 37' படத்தின் டைட்டிலைக் காப்பான் எனப் படக்குழுவினர் வெளியிட்டனர்.