விஜய்சேதுபதியுடன் இணையும் சூரி!
பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்சன், விஜய் சேதுபதியை வைத்து புதிய படத்தை தயாரிக்க உள்ளது. வாலு, ஸ்கெட்ச் உள்ளிட்ட படங்களை இயக்கிய விஜய் சந்தர் இப்படத்தை இயக்குகிறார்.
கருப்பன் படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதியின் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். சண்டைக்காட்சி அனல் அரசு மேற்கொள்கிறார். இந்நிலையில் விஜய் சேதுபதியுடன் பிரபல காமெடி நடிகர் சூரியும் இணைகிறார்.
சுந்தர பாண்டியன், ரம்மி ஆகிய படங்களை தொடர்ந்து சூரியும், விஜய் சேதுபதியும் இணைக்கிறார்கள். பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடைபெறும் என தெரிகிறது.