1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated : வியாழன், 5 அக்டோபர் 2023 (08:31 IST)

ஏ.ஆர்.ரஹ்மான் மன்னிப்பு கேட்க ​வேண்டும்: அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் நோட்டீஸ்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ர​ஹ்மானுக்கு பதில் நோட்டீஸ் அனுப்பிய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் அவர் ஏ.ஆர்.ரஹ்மான் தங்கள் சங்கத்திடம் உடனடியாக நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கேட்க ​வேண்டும் என்றும், நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களுக்குள் ரூ.15 கோடி செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு இசை நிகழ்ச்சி நடத்துவதாக ரூ.29.50 லட்சம் ஏ.ஆர்.ரஹ்மான் முன்பணம் பெற்றதாகவும், ஆனால் அந்த பணத்தை அவர் திருப்பி தரவில்லை எனவும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம்  குற்றச்சாட்டி இருந்தது.
 
இசை நிகழ்ச்சி நடத்த அனுமதி கிடைக்காததால் நிகழ்ச்சிக்கான முன் தொகையை திருப்பி கேட்டதாகவும், அதனை  தரவில்லை எனவும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran