1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 31 மே 2021 (23:12 IST)

தந்தை பிறந்தநாளில் மக்களுக்கு உதவிய சூப்பர் ஸ்டார் !

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் தந்தை கிருஷ்ணாவுக்கு இன்று 31 ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. தனது தந்தையின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் மகேஷ்பாபு, தான் நடித்த படங்களின் போஸ்டர், டிரைலர், ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் வெளியிடுவார் மகேஷ்பாபு.

ஆனால், தற்போது கொரொனா இரண்டம் கட்ட அலை வேகமாகப் பரவிவருவதால், ஆந்திராவில் குண்டூர் மாவட்டத்தில் உல்ல புர்ரிபாலம் கிராம மக்கள் எல்லோருக்கும் மருத்துவமனைகளுடன் இணைந்து தனது சொந்த செலவில் தடுப்பூசி வழங்கியுள்ளார் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு.  இதுகுறித்த புகைப்படங்களை மகேஷ்பாபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இது வைரலாகி வருகிறது.

தற்போது சர்காரு வாரு பாட்டா என்ற படத்தில் மகேஷ் பாபு நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.