1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 8 நவம்பர் 2017 (20:53 IST)

ஏவிஎம் சரவணன் பேத்தி திருமணம்: ரஜினிகாந்த் வாழ்த்து

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் நிறுவனமான ஏவிஎம் நிறுவனத்தை நிர்வகித்து வரும் ஏவிஎம் சரவணன் அவர்களின் பேத்தியும், எம்.எஸ்.குகன் அவர்களின் மகளுமான அபர்ணா அவர்களுக்கும், பிரபல  திரைப்படத்தயாரிப்பாளர் எம்.ரகுநாதன் அவர்களின் மகன் ஷ்யாம் அவர்களுக்கும் நாளை ஏவிஎம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் திருமணம் நடைபெறவுள்ளது

இந்த நிலையில் இன்று அதே மண்டபத்தில் திருமண வரவேற்பு நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட கோலிவுட் பிரபலங்கள் பலர் நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

எம்பிஏ படித்துள்ள மணமகன் ஷ்யாம், இயக்குனர் மிஷ்கின் இயக்கவுள்ள அடுத்த படத்தில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இரண்டு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் இந்த படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளிவரும் என்று கூறப்படுகிறது.