1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 9 அக்டோபர் 2024 (09:44 IST)

முள்ளும் மலரும் படத்தின் காளிக்கு நிகரான நடிப்பை வேட்டையனில் கொடுத்துள்ளார்- ரஜினி குறித்து இயக்குனர் ஞானவேல்!

ஜெயிலர் என்ற சூப்பர் ஹிட் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கிய வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர. அனிருத் இசையமைக்க, எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சமீபத்தில் டீசர் மற்றும் டிரைலர் ஆகியவை வெளியாகிக் கவனம் ஈர்த்துள்ளன. படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் படம் பற்றி பேசியுள்ள இயக்குனர் ஞானவேல்  ரஜினிகாந்தை இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் என்பதைத் தாண்டி நடிகராகவும் பார்க்கலாம் எனக் கூறியுள்ளார்.

அதில் “முள்ளும் படத்துக்கு நிகரான நடிப்பை இந்த படத்தில் ரஜினிகாந்த் வழங்கியுள்ளார். அவரின் நட்சத்திர அந்தஸ்தை தாண்டி இந்த படத்தில் அவரின் நடிப்புத் திறனையும் பயன்படுத்தியுள்ளேன். இந்த படத்தில் முள்ளும் மலரும் படத்தின் நிழலாக அவரைப் பாரக்கலாம்.” எனக் கூறியுள்ளார்.