திங்கள், 25 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 31 அக்டோபர் 2021 (17:44 IST)

ரஜினிகாந்த் வீடு திரும்புவது எப்போது? மருத்துவமனை வட்டாரங்கள் தகவல்!

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரஜினிகாந்த் வீடு திரும்புவது எப்போது என்ற தகவல் மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து தற்போது கசிந்துள்ளது 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் 
 
அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர் என்பதும் தற்போது அவர் மருத்துவமனையில் முழு ஓய்வு பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று மாலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து வெளியான தகவலின்படி நாளை காலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் என்று கூறப்படுகிறது
 
ரஜினிகாந்த் உடல் நலம் தற்போது முழு அளவில் குணமாகி விட்டதாகவும் இதன் காரணமாக அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாகவும் மருத்துவர்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன