1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 28 மே 2018 (21:02 IST)

100வது படத்தை விஜய்யிடம் ஒப்படைத்த சூப்பர் குட் பிலிம்ஸ்!

நடிகர் விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார். 
 
இந்த படத்தை முடித்த பிறகு விஜய் மோகன் ராஜா, ஏ.எல்.விஜய் உள்ளிட்ட சில முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்க வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. 
 
இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சூப்பர் குட் பிலிம்ஸ் கடம்பன், மொட்ட சிவா கெட்ட சிவா படங்களுக்கு பிறகு படங்கள் எதுவும் தயாரிக்காமல் இருக்கிறது. 
 
இந்நிறுவனத்தின் நூறாவது படத்தை விஜய்யை வைத்து தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இதை நடிகர் ஜீவா உறுதிப்படுத்தியுள்ளார். ஏற்கனவே விஜயின் ஜில்லா படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.