1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 2 நவம்பர் 2020 (18:21 IST)

ஆலோவீன் கொண்டாட்டம்: விசித்திர கெட்டப்பிலும் சொக்க வைக்கும் சன்னி லியோனி!

ஆண்டு தோறும் அக்டொபர்  31ம் தேதி ஆலோவீன் என்ற பண்டிகை கொண்டப்படுகிறது. சமஹைன் திருவிழாவான இதை கேல் நாகரிகத்தின் அறுவடைக் காலங்களில் கொண்டாடப்படுகிறது. இந்த உலகத்திற்கும் மறு உலகத்திற்குமான இடைவெளி இந்நாளில் மெலிந்து போவதாய் பழைய செல்ட் இனத்தவர் நம்பினர்.


அன்றைய நாளில் தங்களது முன்னோர்களின் ஆவிகளுக்கு அவர்கள் மரியாதை செய்வதோடு தீங்கிழைக்கும் பிற ஆவிகளை துரத்துவதையும் மேற்கொள்கின்றனர். தீய ஆவிகளில் இருந்து தங்களைப் பாதுகாக்கும் அடையாளமாக தாங்களும் அது போன்ற முகமூடிகளையும் ஆடைகளையும் அந்நாளில் அணிந்து கொள்கின்றனர்.


இந்த கொண்டாட்டத்தில் மக்கள் பல்வேறு வகையான ஆடைகளும் மூகமூடிகளும் அணிந்துகொண்டு கெட்ட ஆவிகளை சமாதானப்படுத்துவார்கள். அந்தவகையில் நடிகர் நடிகைகள் உடன்பட பலரும் விதமான தோற்றத்தில் புகைப்படங்களை வெளியிட்டனர். தற்ப்போது சன்னி லியோனி தனது கணவரோடு ஆலோவீன் பண்டிகை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த கெட்டப்பில் சன்னி லியோனியை பார்த்தால் ஆவிகளே அவர் மீது காதல் கொள்ளும் அந்த அளவிற்கு அழகாக இருக்கிறார்.