1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: வெள்ளி, 26 மே 2017 (13:15 IST)

உங்கள் கணவன் எனக்கு வேண்டாம் - சன்னி லியோன் பதிலடி

பெரிய நடிகர்களின் மனைவிகள் பயப்படவேண்டாம். உங்கள் கணவன்மார்களை நான் அபகரிக்கப் போவதில்லை என பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
பாலிவுட் படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கிறங்கடித்து வருபவர் சன்னிலியோன். இந்நிலையில், பாலிவுட்டின் பெரிய நடிகர்களின் மனைவிகள், சன்னிலியோனுடன் நடிக்கக்கூடாது என்று தங்கள் கணவர்களுக்கு கட்டளையிட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது.
 
சமீபத்தில் முன்னணி நடிகர்களின் மனைவிகள் ஒரு பார்ட்டியில் இணைந்தபோது அனைவரும் பேசி தங்களுடைய கணவர்கள் சன்னிலியோனுடன் நடிக்கக்கூடாது என்று கட்டுப்பாட்டை வைக்க வேண்டும் என்று முடிவு செய்ததாகவும், இதனால் இனிமேல் சன்னிலியோனுடன் நடித்தால் அவ்வளவுதான் என்று நடிகர்களை பயமுறுத்தியதாகவும் கூறப்பட்டது.
 
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள சன்னிலியோன் “உங்கள் கணவர்கள் எனக்கு தேவையில்லை. எனக்கு மிகவும் சிறந்த கணவர் இருக்கிறார். அவரை நான் காதலிக்கிறேன். அவர் மிகவும் செக்ஸியானவர். என் தேவைகள் அனைத்தையும் அவர் பூர்த்தி செய்கிறார். எனக்கு வேறு யாரும் தேவையில்லை. சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். 
 
என்னுடன் நடிக்கும் நடிகர்கள் அனைவருமே திருமணமானவர்கள்தான். அவர்களின் மனைவியுடன் நான் நட்புடனே பழகுகிறேன். இப்படியிருக்க ஏன் பெரிய நடிகர்களின் மனைவிகள் என்னை பார்த்து பயப்பட வேண்டும்?” என சன்னி லியோன் கேள்வி எழுப்பியுள்ளார்.