1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (16:55 IST)

சன்னி லியோனின் காண்டம் விளம்பரம்: சர்ச்சைக்கு பதிலடி!

சன்னி லியோனின் காண்டம் விளம்பரம்: சர்ச்சைக்கு பதிலடி!

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் சமீபத்தில் நடித்த காண்டம் விளம்பரத்தால் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதனையடுத்து சன்னி லியோனுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்தனர்.


 
 
பிரபல கவர்ச்சி நடிகை அடிக்கடி கவர்ச்சி தொடர்பான பல சர்ச்சைகளில் சிக்குவார். இவர் பல காண்டம் விளம்பரங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த சில காண்டம் விளம்பரங்கள் தணிக்கை துறையால் வெளியிடப்படும் முன்னரே தடை செய்யப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் சமீபத்தில் இவர் நடித்த காண்டம் விளம்பரம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுவதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது. அந்த விளம்பரத்தில் சன்னி லியோன் மிகவும் ஆபாசமாக செய்கை செய்கிறார் என கூறப்பட்டது.
 
இது தொடர்பாக மத்திய தகவல் தொலைத்தொடர்பு அமைச்சகத்தில் புகார் அளிக்க இருப்பதாகவும், இந்த விளம்பரத்தில் சன்னி லியோன் செய்யும் ஆபாச செய்கை இந்திய கலாச்சாரத்துக்கு எதிரனது இதில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.
 
இந்நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய சன்னி லியோன், ‘ஒரு நாட்டில் உள்ள குடிமகனுக்கு எது வேண்டும் எது வேண்டாம் என்பதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும். இந்த வி‌ஷயத்தில் நான் என்ன செய்ய வேண்டும் என்பதை அரசே முடிவு செய்யட்டும் என கூறியுள்ளார்.