1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: சனி, 3 நவம்பர் 2018 (17:05 IST)

சுந்தர்.சி ஹீரோவாக நடிக்கும் திரில்லர் படம் இருட்டு

’முகவரி', 'தொட்டி ஜெயா', 'நேபாளி', '6 மெழுகுவர்த்திகள்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வி.இசட். துரை. இவர் தற்போது இருட்டு என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் சுந்தரி சி ஹீரோவாக நடித்துள்ளார்.
 
இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். படத்தில் சுந்தர்.சி உடன் முக்கிய கதாபாத்திரங்களில் தன்ஷிகா, சாக்சி பர்வீந்தர், வி.டி.வி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கிறார்கள்.
 
படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது: நானும் சுந்தர்.சி-யும் இணைந்து ஒரு படம் எடுக்கலாம் என்று முடிவு செய்தபோது, என்னிடம் சுந்தர்.சி. நீங்கள் ஒரு திகில் படம் தான் இயக்க வேண்டும் என்றார். ஆனால்,  எனக்கு திகில் படம் என்றால் பயம். ஆகையால் நான் இதுவரை ஒரு பேய் படம் கூட பார்த்தது கிடையாது. இருப்பினும், சுந்தர்.சி. உங்களுக்கு இயக்கும் திறமை நன்றாக இருக்கிறது. நீங்கள் திகில் படம் இயக்கினால் நிச்சயம் வெற்றிபெறும் என்று ஊக்கப்படுத்தினார். அவர் கொடுத்த ஊக்கத்தினால் தான் நான் ‘இருட்டு’ படத்தை இயக்கினேன்.
 
இப்படம் முற்றிலும் வித்தியாசமான கதை மற்றும் கருத்தைத் தாங்கி கொண்டு வரஉள்ளது.  பேய் இருக்கிறதா? இல்லையா? என்ற விவாதத்தை தாண்டி,  அதைவிட பயங்கரமான சம்பங்கள் நடந்திருக்கிறது என்று ஒரு சாரரும், அது எப்படி நடந்திருக்க முடியும்? என்று ஒரு சாரரும் விவாதம் நடத்தும் அளவிற்கு இப்படமாக இருக்கும்.
 
இருட்டு படத்தில் சுந்தர்.சி காவல்துறை அதிகாரியாக வருகிறார். இவருடைய மனைவியாக ஷாக்ஷி பர்விந்தர் நடிக்கிறார். தன்ஷிகா  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முழுக்க முழுக்க திகில் படம் என்றாலும் நகைச்சுவை வேடத்தில் யோகிபாபுவும், VTV கணேஷும் நடித்துள்ளார்கள்.
 
படத்தின் பெரும்பங்கு காட்சிகள் ஊட்டியில் படபிடிப்பு முடிந்த நிலையில், தன்ஷிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் சூரத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சில காட்சிகளே மீதம் உள்ளது. அதையும் ஊட்டியிலேயே படமாக்க முடிவு செய்திருக்கிறோம் என்றார்.