புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Suga)
Last Updated : திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (22:07 IST)

யார் தான் அந்த ‘சங்கமித்ரா?’ திணறும் சுந்தர்.சி

‘சங்கமித்ரா’ படத்தில் யாரை ஹீரோயினாக நடிக்க வைப்பது எனத் தெரியாமல் திணறி வருகிறார் சுந்தர்.சி.


 
 
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக இருப்பதாக சொல்லப்பட்டு வரும் வரலாற்றுப் படம் ‘சங்கமித்ரா’. பெண்ணை மையப்படுத்திய இந்தக் கதையில் சங்கமித்ராவாக ஸ்ருதி ஹாசனும், ஹீரோக்களாக ஜெயம் ரவி மற்றும் ஆர்யாவும் நடிப்பதாக இருந்தது.
 
ஆனால், திடீரென இந்தப் படத்தில் இருந்து விலக்கப்பட்டார் ஸ்ருதி ஹாசன். அவருக்குப் பதில் அனுஷ்கா, நயன்தாரா என பேசப்பட்டும், கடைசிவரை கைகூடவில்லை. 
 
எனவே, சுந்தர்.சி படங்களில் அதிகம் நடித்துள்ள ஹன்சிகா தான் ஹீரோயின் என்றனர். சுந்தர்.சி.யும் அவரை வைத்து டெஸ்ட் ஷூட் செய்து பார்த்தார். ஆனால், ஹன்சிகா அதற்கு செட்டாகவில்லை. 
 
எனவே, யாரை ஹீரோயினாகப் போட்டால் சரியாக இருக்கும் என சுவரில் தலையை முட்டாத குறையாக யோசித்து வருகிறார் சுந்தர்.சி.