1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 29 அக்டோபர் 2022 (16:41 IST)

சங்கமித்ரா வருமான்னு தெரில… ஆனா?... இயக்குனர் சுந்தர் சி கொடுத்த அப்டேட்!

ஜெயம்ரவி, ஆர்யா நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்த திரைப்படம் சங்கமித்ரா. இந்த படம் கடந்த 2017 ஆம் ஆண்டு தயாரிக்க திட்டமிடப்பட்டது என்பதும் 2018ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த நிலையில் இந்த படம் கால தாமதமாகி வருவதை அடுத்து அவர் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். இந்த நிலையில் ஐந்து ஆண்டுகள் கழித்து தற்போது லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க முன்வந்துள்ளதாகவும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுபற்றி பேசியுள்ள இயக்குனர் சுந்தர் சி “சங்கமித்ரா திரைப்படம் வருமா என்று உறுதியாக தெரியாது. ஆனால் அது போன்ற பிரம்மாண்ட படம் ஒன்று என்னிடம் இருந்து வரும்” எனக் கூறியுள்ளார்.