செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 3 அக்டோபர் 2022 (14:59 IST)

நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் தடுமாறும் விக்ரம் வேதா!

விக்ரம் வேதா திரைப்படத்தின் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக வெளியானது.

கடந்த 2017 ஆம் ஆண்டு மாதவன்-விஜய் சேதுபதி நடிப்பில் புஷ்கர்-காயத்ரி ஆகியோர் இயக்கிய ”விக்ரம் வேதா” திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பாலிவுட் ரீமேக்கில் பிரபல நடிகர்களான ஹ்ருத்திக் ரோஷன் மற்றும் சயிஃப் அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் ரிலீஸான நாளில் விக்ரம் வேதா திரைப்படம் ரிலீஸானது. படம் நல்ல விமர்சனங்களையே பெற்று வருகிறது. இந்நிலையில் வசூல் மட்டும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று சொல்லப்படுகிறது. இதுவரை இந்தியாவில் 4 நாட்களில் 40 கோடி ரூபாய்க்குள்தான் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.