1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 4 நவம்பர் 2022 (14:55 IST)

கண்டுகொள்ளப் படாத சுந்தர் சியின் காபி வித் காதல் திரைப்படம்!

சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா ஸ்ரீகாந்த் மற்றும் ஜெய் நடிப்பில் உருவான காபி வித் காதல் என்ற திரைப்படம் வரும் நவம்பர் 4ஆம் தேதி இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த், யோகி பாபு, மாளவிகா ஷர்மா, அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா, ரெடின் கிங்ஸ்லி, ரைசா வில்சன், திவ்யதர்ஷினி, உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இன்று வெளியாகியுள்ள நிலையில் எதிர்பார்ப்புக்கு மாறாக இந்த படத்துக்கு குறைந்த அளவிலேயே ரசிகர்களின் ஆதரவு கிடைத்துள்ளது. அதுவும் படம் பார்த்த பின்னர் பலரும் நெகட்டிவ் விமர்சனங்களையே தெரிவித்துள்ளனர். வழக்கமாக சுந்தர் சி படங்களில் நகைச்சுவை ரசிகர்களைக் கவரும் விதமாக உருவாக்கப்படும். ஆனால் இந்த படத்தில் நகைச்சுவை அம்சமும் ரசிகர்களைக் கவரவில்லை என்று சொல்லப்படுகிறது.

மாறாக புதுமுகங்கள் நடித்துள்ள லவ் டுடே திரைப்படம் இளைஞர்களை பெரியளவில் கவர்ந்துள்ளது.