திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 3 மே 2022 (17:09 IST)

இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் - நடிகை சுஹாசினி சர்ச்சை கருத்து

Suhasini
இந்தியன் என்றாலே தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ஹிந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் என நடிகை சுகாசினி தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
 
ஹிந்தியை இணைப்பு மொழியாக அனைத்து மாநிலங்களும் பயன்படுத்த வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதற்கும் இந்தி மொழிதான் தேசிய மொழி என நடிகர் அஜய் தேவ்கான் கூறியதற்கும் தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு வந்தது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் திடீரென, ‘மக்கள் இந்தி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் என்றும் நடிகை சுகாசினி தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது