சுதா கொங்கராவின் அடுத்த படம்.. புகழ்பெற்ற நாவல் உரிமையை பெற்றதாக அறிவிப்பு..!
இயக்குனர் சுதா கொங்கரா புகழ்பெற்ற நாவல் ஒன்றை திரைப்படமாக்க உரிமையை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளதை அடுத்து இந்த படம் விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.
சூரரைப் போற்று உள்பட சில வெற்றி படங்களை இயக்கிய சுதா கொங்கரா அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நரன் என்பவர் என்பவர் எழுதிய வேட்டை நாய்கள் என்ற நாவலை சுதா கொங்கரா திரைப்படமாக்க உரிமையை பெற்றுள்ளதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். இந்த அற்புதமான கதை உரிமையை வாங்கிய பிறகு நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் என்றும் நாவலின் திரைக்கதையை எழுத தொடங்க ஆர்வமாக உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த பயணம் எனக்கு உண்மையில் உற்சாகமாக ஒரு பயணமாக இருக்கும் என்றும் நான் இதுவரை அனுபவித்திராத ஒரு அனுபவத்தை பெற இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த நாவலுக்கு பொருத்தமான ஹீரோ யாராக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்த புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்தப் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. வேட்டை நாய்கள் திரைப்படத்தில் எந்த ஹீரோ நடிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Edited by Siva