வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 31 டிசம்பர் 2018 (13:34 IST)

சவுத் இந்திய சினிமாவின் ஸ்டண்ட் யூனியன் தேர்தல்: விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கை!

தமிழ் திரைப்படத்தின் சினி மற்றும் டிவி ஸ்டண்ட் இயக்குனர்கள் மற்றும் ஸ்டண்ட் நடிகர் யூனியன் தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 


 
சென்னை வடபழனியில் அமைதுள்ள தென்னிந்திய திரைப்பட சினி மற்றும்  டிவி ஸ்டண்ட் இயக்குனர்கள் மற்றும் ஸ்டண்ட் நடிகர்கள் யூனியன் பதவிகளுக்கான தேர்தல் நேற்று நடைப்பெற்றது. 
 
யூனியன் தலைவர் பதவிக்கு கிருபாநிதி, சோமசுந்திரம் ஆகியோரும் உபதலைவர் பதவிக்கு தினேஷ் ஹரிபிரசாத் மற்றும் ராஜசேகர் ஆகியோர் போட்டியிட்ட இதன் வாக்குபதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைப்பெற்றது.
 
இந்த தேர்தலில் செயலாளர் பதவிக்கு குமார், பொன்னுசாமி ஆகியோரும் துணைசெயலாளர் பதவிக்கு கபிலன், மணிகண்டன், ராஜி ஆகியோரும் போட்டியிட்டனர். இணை செயலாளர் பதவிக்கு அப்ரோஸ் , மோகன், சுரேஷ் ஆகியோரும் போட்டியிட்டனர்.மேலும் செயற்குழு உறுப்பினருகான தேர்தலும் நேற்று நடைப்பெற்ற இந்த தேர்தலில் மொத்தம்  40 பேர் போட்டியிட்டனர். 
 
மொத்தம் 19 இடங்களுக்கு இந்த தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. யூனியனுக்கான வாக்கு பதிவுகள் நேற்று மாலை 6 மணியுடன் முடிவைந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் வாக்கு எண்ணிக்கைகான பணிகள் தொடங்கியது. 
 
இந்நிலையில் இன்று மதியம் தேர்தல் முடிவுகளும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பெயரும் அறிவிக்கப்படும் என்று யூனியன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.