திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 10 ஜூலை 2021 (10:35 IST)

ஆர் ஆர் ஆர் படத்தில் இருந்து விலகிய சண்டை பயிற்சி இயக்குனர்கள்!

இயக்குனர் ராஜமௌலி இயக்கி வரும் ஆர் ஆர் ஆர் படத்தில் இருந்து சண்டை பயிற்சி இயக்குனர்கள் ராம் லட்சமனன் விலகியுள்ளனராம்.

தென்னிந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனராக உருவாகியுள்ள ராஜமௌலி பாகுபலி படத்துக்குப் பிறகு ராம் சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் , அஜய் தேவ்கான் மற்றும் ஆலியா பட் ஆகியோரை வைத்து ஆர் ஆர் ஆர் என்ற வரலாற்றுப் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஆலியா பட் மற்றும் ஹாலிவுட் நடிகை ஒருவர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் அஜய் தேவ்கான் சம்மதித்துள்ளார். இந்நிலையில் படத்தின் பெரும்பகுதிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் இன்னும் சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டியுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 3 ஆண்டுகளாக அவ்வப்போது நடந்து வருகின்றன. இதனால் படத்தில் பணியாற்றும் பல கலைஞர்கள் வேறு படங்களுக்கு செல்வது தடைபட்டது. இந்நிலையில் இப்போது இந்தபடத்தில் இருந்து ஸ்டண்ட் இயக்குனர்கள் ராம் லட்சுமணன் தங்கள் மற்ற படங்களில் கவனம் செலுத்துவதற்காக ஆர் ஆர் ஆர் படத்தில் இருந்து விலகியுள்ளனர்.