ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் புதிய அறிவிப்புக்கு நெட்டிசன்கள் கிண்டல்!
ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் புதிய அறிவிப்புக்கு நெட்டிசன்கள் கிண்டல்!
பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் இன்று மாலை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக அறிவித்திருந்தார்கள். இந்த அறிவிப்புக்கு நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று மாலை புதிய அறிவிப்பு ஒன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த அறிவிப்பு குறித்து பல்வேறு யூகங்கள் எழுந்தன என்பது குறிபிடத்தக்கது
ஆனால் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான மெட்ராஸ் படத்தின் தெலுங்கு டப்பிங் ஜனவரி மாதம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது