ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 2 டிசம்பர் 2020 (12:05 IST)

சைக்கிளிங் சென்ற கவுதம் கார்த்திக்; வழிமறித்து செல்போன் திருட்டு!

தமிழ் சினிமா நடிகர் கவுதம் கார்த்தில் சைக்கிளில் சென்றபோது மர்ம நபர்கள் அவரிடமிருந்த செல்போனை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமா நடிகர் கார்த்திக்கின் மகனும், இளம் தமிழ் நடிகர்களில் முக்கியமானவருமாக இருப்பவர் கௌதம் கார்த்திக். மணிரத்னம் இயக்கத்தில் கடல் உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் இன்று காலை வழக்கம்போல தனது வீட்டிற்கு அருகே உள்ள டிடிகே சாலையில் உடற்பயிற்சிக்காக சைக்கிளிங் சென்றுள்ளார்.

அப்போது அவரை வழிமறித்த இரண்டு பேர் அவரிடம் இருந்த விலை உயர்ந்த செல்போனை திருடிக் கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து உடனடியாக அவர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது செல்போனில் பிரபலங்கள் பலரின் தொடர்பு எண்கள் இருப்பதால் செல்போனை கண்டுபிடிக்க போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.