போக்கிரி சைமன்: மலையாளத்தில் விஜய் ரசிகர்கள் பற்றிய கதை!!
தமிழகம் தவிர்த்து கேரளாவிலும் நடிகர் விஜய்க்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.
கேரளாவில் விஜய் படம் ரிலீசாகும் போது, மலையாள படங்களுக்கு இணையாக தியேட்டர்களில் ரசிகர்கள் அலைமோதுவார்கள்.
இந்நிலையில் “போக்கிரி சைமன்” என்ற மலையாளப் படத்தில் படத்தின் கதாநாயகன் விஜய் ரசிகராகவே தோன்றவுள்ளார்.
விஜய்யின் சூப்பர் ஹிட் படமான போக்கிரியை பிரதிபலிக்கும் வகையில், இந்த படத்திற்கு ‘போக்கிரி சைமன்’ என பெயரிடப்பட்டுள்ளது.