ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 7 நவம்பர் 2017 (19:25 IST)

பாப் பாடகியாகும் வாரிசு நடிகை??

சில முன்னணி ஹீரோக்களுடன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி படத்தில் நடித்த ஸ்ருதி ஹாசன் தற்போது படவாய்ப்புகள் இன்றி இருக்கிறார். 


 
 
சங்கமித்ரா படத்தில் இருந்து ஒதுங்கிய பின்னர் கடந்த சில மாதங்களாக புதிய படங்கள் ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறார். தந்தை கமல் இயக்கும் சபாஷ் நாயுடு படப்பிடிப்புக்காக காத்திருக்கிறார்.
 
நடிப்பில் சுமார் என்றாலும், இசை, பாடல் பாடுவதில் ஏற்கனவே தனது  திறமையை நிரூபித்திருக்கிறார் ஸ்ருதி ஹாசன். 
 
இவர் விரைவில் பாப் பாடகியாக வலம் வரவிருக்கிறாராம். தனது இசை திறமையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இம்முயற்சியை அவர் மேற்கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது. 
 
இதற்காக விரைவில் தனிபாடல் ஒன்று வெளியிடவும், அப்பாடலுக்கு மேடையில் ஆடவும் முடிவு செய்திருக்கிறார். வெளிநாடுகளிலும் மேடைகளில் இசை, பாப் பாடல், நடன நிகழ்ச்சி நடத்தவும் அவர் ஆலோசித்து வருகிறார்.