1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 15 அக்டோபர் 2022 (16:46 IST)

சூரிய ஒளியில் மின்னும் தர்மதுரை நடிகை… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

யுத்தம் செய் படத்தில் துணை கதாபாத்திரத்தில் தோன்றி நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஸ்ருஷ்டி டாங்கே. அதன் பின்னர் ஒரு திருப்பு முனையாக 2014 ஆம் ஆண்டு வெளிவந்த மேகா திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படம் ஹிட்டாகவில்லை எனினும் படத்தில் இடம்பெற்ற புத்தம் புது காலை பாடல் ஹிட்டானதை அடுத்து ரசிகர்களுக்கு பரிச்சயமான முகமான மாறினார்.


அடுத்து அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்த படமாக தர்மதுரை அமைந்தது.  ஆனால் தொடர்ந்து அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை. அந்த படத்துக்குப் பின்னர் காணாமல் போன நடிகை ஸ்ருஷ்டி டாங்கே அடுத்த பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாகவே தமிழில் எந்த வாய்ப்புகளும் இல்லாத அவர் இப்போது தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்க்க முயற்சி செய்து வருகிறார். அந்த வகையில் இப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


இந்நிலையில் இப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளன.