திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 31 மார்ச் 2020 (16:03 IST)

உன் பஞ்சாபி கணவரை எனக்கு நன்றாக தெரியும்: அமலாபால் கணவர் குறித்து ஸ்ரீரெட்டி

உன் பஞ்சாபி கணவரை எனக்கு நன்றாக தெரியும்
பிரபல இயக்குனர் விஜய்யை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்த நடிகை அமலாபால், அதன் பின் அவருடன் ஏற்பட்ட ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இயக்குனர் விஜய் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில், அமலாபாலும் விரைவில் ஒரு பஞ்சாப் பாடகரை திருமணம் செய்துகொள்வார் என்று கூறப்பட்டது. இருவரும் அடிக்கடி நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்ததால் இந்த செய்தி வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது,.
 
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் திடீரென பஞ்சாப் பாடகரை அமலாபால் திருமணம் செய்து விட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்த புகைப்படங்கள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது இருப்பினும் இந்த திருமணத்தை அமலாபால் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
உன் பஞ்சாபி கணவரை எனக்கு நன்றாக தெரியும்
இந்த நிலையில் பஞ்சாப் பாடகரை அமலாபால் திருமணம் செய்தது குறித்து தனது பேஸ்புக்கில் கருத்து கூறிய நடிகை ஸ்ரீரெட்டி ’உன் மணவரை பஞ்சாபி கணவர் உன்னை நன்றாக பார்த்து கொள்வார். பஞ்சாபியர்கள் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்’ என்று கூறியுள்ளார். அமலாபாலுக்கு வாழ்த்துக் கூறும் வகையில் ஸ்ரீரெட்டி கூறியுள்ள இந்த பதிவை அமலாபாலின் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இருப்பினும் அமலாபாலுக்கு ஸ்ரீரெட்டி திடீரென வாழ்த்து கூறியது ஏன் என்ற சந்தேகத்தையும் அவர்கள் எழுப்பி வருகின்றனர்