செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 14 ஜூலை 2018 (10:26 IST)

நடிகர் விஷால் என்னை மிரட்டுகிறார் - ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார்

தமிழ் திரையுலகினர் மீது பாலியல் புகார்களை கூறிவரும் ஸ்ரீரெட்டி, நடிகரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் தன்னை மிரட்டுவதாக பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கு பட உலகில் வாய்ப்பு தருவதாக கூறி வாய்ப்பு தேடும் நடிகைகளை இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும் படுக்கைக்கு பயன்படுத்தினர் என நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறி அதிர வைத்தார். 
 
தற்பொழுது அவர் டர்ன் தமிழ் திரையுலகின் பக்கம். இதுவரை அவரது லிஸ்டில் இயக்குநர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோர் சிக்கியிருக்கின்றனர். இன்னும் என் லிஸ்டில் பல தமிழ் திரையுலக பிரபலங்கள் உள்ளார்கள் என்றும் அவர்கள் பெயரை விரைவில் வெளியிடுவேன் என கூறியிருந்தார் ஸ்ரீரெட்டி.
 
இந்நிலையில் ஸ்ரீரெட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் நடிகரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் தன்னை மிரட்டுவதாகவும் அதனால் தான் பயப்படப்போவதில்லை எனவும், கோலிவுட் சினிமாவின் இருண்ட பக்கத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வருவேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 
இதைப்பார்த்த பலர் சங்கத்து வேலைய பாருடான்னு சொன்னா அங்கத்து வேலைய பாத்துக்கிட்டு இருக்க என விஷாலை கிண்டலடித்து வருகின்றனர்.