திங்கள், 13 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 12 மே 2017 (21:52 IST)

குறைவான சம்பளம் என பாகுபலியை உதறிய ஸ்ரீதேவி

விஜய்யின் புலி படத்தில் நடித்த ஸ்ரீதேவி சம்பளம் குறைவு என பாகுபலியில் நடிக்கும் வாய்ப்பை இழந்தார்.


 

 
முதலில் ராஜமௌலி ரம்யா கிருஷ்ணன் நடித்த காதாபாத்திரத்துக்கு முதலில் ஸ்ரீதேவியிடம்தான் கேட்டுள்ளார். ஆனால் ஸ்ரீதேவி ரூ.6 கோடி சம்பளம் கேட்டதால் ராஜமௌலி பின்வாங்கிவிட்டார். அதன்பிறகு இந்த காதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்க ஒப்புக்கொண்டார்.
 
தற்போது பாகுபலி இந்திய சினிமாவில் ஒரு வரலாறு படைத்துள்ளது. இந்தியா முழுவதும் அனைவரிடமும் வரவேற்பு பெற்றுள்ளது. சிவகாமி கதாபாத்திரம் குறித்து ரம்யா கிருஷ்ணன் கூறியதாவது:-
 
சிவகாமி சாதாரண பெண் இல்லை. அவர் குணத்தில் நல்லது, கெட்டது இரண்டும் உண்டு. இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைப்பது அரிது. அதானல் உடனே ஒத்துக்கொண்டேன், என்று கூறியுள்ளார்.