புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வியாழன், 14 நவம்பர் 2019 (11:33 IST)

இரவு முழுவதும் நிறைய செய்திருக்கிறோம் - உதயநிதி குறித்து ஸ்ரீ ரெட்டி சர்ச்சை பதிவு!

தெலுங்கு சினிமாவின் சர்ச்சை நடிகையான ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்புக்காக தன்னை பல நடிகர்கள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என பலரும் தன்னை தவறாக பயன்படுத்திக்கொண்டு ஏற்மற்றிவிட்டதாக பல முன்னணி பிரபலங்களின் பெயரை வெளியிட்டு நிர்வாண போராட்டம் நடத்தி சர்ச்சையை கிளப்பி பிரபலமானார்.
இதையடுத்து சென்னையில் குடியேறிய ஸ்ரீ ரெட்டி அடிக்கடி சர்ச்சையான விஷயங்களை பதிவிட்டு சம்மந்தப்பட்டவரை கதிகலங்க வைத்திடுவார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இயக்குனர் முருகதாஸ், ஸ்ரீகாந்த், விஷால் உள்ளிட்ட பலரை பற்றியும் அதிர்ச்சி தகவல்களை பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது நடிகர் உதயநிதி ஸ்டாலின் குறித்து பதிவிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார் ஸ்ரீ ரெட்டி, அந்த பதிவில்.. ஹாய் தமிழ் நடிகர் உதயநிதி ஸ்டாலின்..மூன்று வருடத்திற்கு முன்னால் ஹைதராபாத்தில் நடைபெற்ற "கதிர்வேலன் காதல்" படத்தின் படப்பிடிப்பின் போது நாமிருவரும் நடிகர் விஷால் ரெட்டி மூலம் சந்தித்தோம். அதையடுத்து நீங்கள் எனக்கு வாய்ப்பு தருவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு  கிரீன் பார்க் ஹோட்டலில் இரவு முழுவதும் என்னுடன் உறவில் இருந்தீர்கள். அதன் பிறகும் நாம் நிறைய செய்திருக்கிறோம். ஆனால், தற்போது வரை எந்த வாய்ப்பும் கொடுக்கவில்லை. நிச்சயம் நீங்கள் என்னுடன் இருந்ததை மட்டும் மறந்திருக்க மாட்டீர்கள் என கூறி கடைசியாக நீங்கள் மிகவும் சிறந்தவர் என குறிப்பிட்டு சர்ச்சையாக பதிவிட்டுள்ளார்.