1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (12:20 IST)

மகேஷ் பாபுவுடன் நடிகை இருந்த வீடியோ ‘லீக்’கானது

மகேஷ் பாபுவுடன் நடிகை ஒருவர் இருந்த வீடியோ லீக்காகி, சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.



ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துள்ள படம் ‘ஸ்பைடர்’. தமிழ் – தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், ரகுல் ப்ரீத்சிங் ஹீரோயினாக நடித்துள்ளார். வருகிற 29ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தில் மகேஷ் பாபு – ரகுல் ப்ரீத்சிங் சம்பந்தப்பட்ட சில காட்சிகள், புகைப்படங்கள், பின்னணி இசை ஆகியவை லீக்காகி, சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால், ‘ஸ்பைடர்’ படக்குழு அதை மறுத்துள்ளது. ‘லீக் என்று சொல்லப்படுவது தவறான செய்தி. அவையெல்லாம் பொய்யான வீடியோக்கள்’ என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.