திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (23:44 IST)

விஜய்க்கு மறுத்த ரஜினி மகேஷ்பாபுவுக்கு ஒப்புக்கொண்டது ஏன்?

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள ரஜினியிடம் அனுமதி கேட்கப்பட்டதாம். ஆனால் தன்னால் இந்த விழாவுக்கு வரமுடியாது என்று ரஜினி கூறியதாகவும், ரஜினி வராததால் கமலும் வரவில்லை என்றும் கூறப்படுகிறது



 
 
இந்த நிலையில் விஜய் பட விழாவுக்கு வரமறுத்த ரஜினி, மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளாராம். மகேஷ்பாபுவின் முதல் தமிழ் படம் என்பது மட்டுமின்றி மகேஷ்பாபுவின் தந்தையும் பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணா மீது ரஜினி மிகுந்த மரியாதை வைத்திருப்பதால் இந்த விழாவிற்கு அவர் வருகை தர சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. தெலுங்கு நடிகர் கிருஷ்ணா, நம்மூர் சிவாஜிகணேசனுக்கு இணையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஸ்பைடர் இசை வெளியீட்டு விழாவிற்கு ரஜினி வர சம்மதம் தெரிவித்ததால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். இதனால் மகேஷ்பாபுவின் தமிழ் எண்ட்ரி பிரமாண்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.