புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 10 நவம்பர் 2020 (08:47 IST)

ஸ்பைடர் மேனையே மாஸ்க் போட வச்சுட்டாங்களே – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

ஸ்பைடர் மேன் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு புது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகர் டாம் ஹாலண்ட்.

பிரபல காமிக்ஸ் ஆசிரியரான ஸ்டான் லீயால் எழுதப்பட்ட காமிக்ஸ் கதாப்பாத்திரம்தான் இந்த ஸ்பைடர்மேன். மார்வெல் காமிக்ஸ் கதாப்பாத்திரங்களை டிஸ்னி நிறுவனம் வாங்கி மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் திரைப்படங்கள் எடுத்து வருகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் மார்வெல் திரைப்படங்கள் உலகம் முழுவது ஹிட் ஆகியுள்ளன. சமீபத்தில் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் 2.8 பில்லியன் டாலர்கள் வசூலித்து உலகில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்தது.

இதையடுத்து இப்போது 'ஸ்பைடர்மேன் 3'  படப்பிடிப்பு நடந்து வருகிறது. படத்தின் நாயகன் டாம் ஹாலண்ட், படப்பிடிப்பிலிருந்து ஒரு புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் ஸ்பைடர்மேன் கதாபாத்திரம் வழக்கமாக அணிந்திருக்கும் முகமூடிக்கு மேல் மேலும் ஒரு மாஸ்க் அணிந்து இருக்கிறது. மேலும் அதில் ‘முகக்கவசம் அணியுங்கள், நான் இரண்டு அணிந்திருக்கிறேன் ‘ எனக் கூறியுள்ளார்.