1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 4 ஏப்ரல் 2017 (22:01 IST)

எல்லாமே போச்சு. அமெரிக்காவில் கதறி துடிக்கும் பாடகர் எஸ்பிபி

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் அமெரிக்கா சென்று பல இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடி வருகிறார். தன்னுடைய பாடல்களை எஸ்பிபி பாடக்கூடாது என இசைஞானி இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் காரணமாக அவர் இளையராஜா பாடல்களை தவிர்த்து மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களை பாடி வருகிறார்.





இந்த நிலையில் இன்று அவர் ஒரு இசை நிகழ்ச்சியில் பாடி முடித்துவிட்டு தங்கியிருக்கும் இடத்திற்கு வந்து கொண்டிருப்பதாக் அவர் கொண்டு வந்த பை ஒன்று திருடுபோய்விட்டதாக தெரிகிறது.

அந்த பையில்தான் எஸ்பிபி தனது பாஸ்போர்ட், கிரெடிட் கார்டு, பாட வேண்டிய பாடல்கள் அடங்கிய ஐபாட் மற்றும் செலவுக்கு வைத்திருந்த பணம் ஆகியவை இருந்தது. இவை அனைத்தும் தற்போது திருடுபோய்விட்டதால் எஸ்பிபி கடும் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் எஸ்பிபிக்கு மாற்று பாஸ்போர்ட் ஒன்றை வழங்கியுள்ளது. இருப்பினும் மற்ற பொருட்கள் திருடு போனது போனதுதான் என்பதால் அவர் மனதிற்குள் கதறி துடிப்பதாக் அவரது தரப்பினர் தெரிவித்துள்ளனர்.