திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 4 ஜூன் 2021 (11:17 IST)

மறைந்தாலும் வசீகர குரலாய் மனதில் நினைவாடும் எஸ்.பி.பி'க்கு ஹேப்பி பர்த்டே!

மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி மற்றும் மலையாளத் திரைப்படங்களுக்கு அதிகமாக பாடல் பாடியிருக்கிறார். 1966 முதல் திரைப்படங்களில் பாடத் தொடங்கிய எஸ்.பி.பி இதுவரை 40,000 இற்கும் அதிகமான பாடல்களை 16 இந்திய மொழிகளில் பாடியுள்ளார்.
 
கடந்த ஆண்டு செம்படம்பர் 25ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த எஸ்.பி.பி'க்கு இன்று 75வது பிறந்தாள் இதனை அவரது ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வாழ்த்து கூறி சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 
 
மறைந்தாலும் காலத்தால் அழியாத அவரது பாடலுக்கு இன்னும் பலதலைமுறையினர் நிச்சயம் அவரின் ரசிகர்களாக அமைவார்கள். மனதை வருடும் அவரது பாடலின் நினைவுகளோடு எஸ்பிபிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.