1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 27 ஜூன் 2015 (15:07 IST)

நடிகர் சங்க தேர்தல் விவகாரம்: வரலட்சுமியுடன் நட்பு முறிவா? விஷால் பேட்டி

நடிகர் சங்க தேர்தல் விவகாரம் காரணமாக, நடிகை வரலட்சுமியுடன் மோதலா என்பதற்கு விஷால் பதிலளித்தார்.
 

 
சென்னையில் உள்ள நடிகர் சங்கத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் ஜூலை 15 ஆம் தேதி நடப்பதாக இருந்தது. அதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைகால தடை விதித்திருக்கிறது. தற்போது சங்க தலைவராக சரத்குமார், பொதுச்செயலாளராக ராதாரவி உள்ளனர்.
 
வரும் தேர்தலில் பொதுச்செயலாளர் பதவிக்கு  விஷால், தலைவர் பதவிக்கு நாசர் போட்டியிட உள்ளனர். இதையடுத்து இருதரப்பினரும் ஓட்டுவேட்டையாடி வருகின்றனர்.
 
சரத்குமார் மகள் வரலட்சுமி, விஷாலின் தோழி ஆவார். தேர்தலில் யாருக்கு ஆதரவு தருவீர்கள் என்று வரலட்சுமியிடம் கேட்டபோது,’என் அப்பாவுக்குதான் ஆதரவு தருவேன்’ என்றார்.
 
இதுபற்றி விஷாலிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
 
“வரலட்சுமியின் கருத்தை மதிக்கிறேன். இந்த விவகாரம் எங்கள் நட்பை பாதிக்காது. நான் எது  செய்தாலும் அது எனது சொந்த விருப்பத்தில்தான் செய்கிறேன். யார் தூண்டுதலின் பேரிலும் செய்யவில்லை. நாங்கள் எல்லோரும் தனித்தனியாகவே  இருக்கிறோம். அதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். நடிகர் சங்க விவகாரத்தில் வரலட்சுமியை இழுப்பது நியாயமில்லை.
 
முதல்கட்டமாக வாக்கு சேகரிக்கும் பணியை மதுரை, கரூர், திருச்சி, புதுக்கோட்டையில் முடித்திருக்கிறோம். அடுத்த கட்ட பணியை விரைவில் தொடங்குவோம். நாடக நடிகர்களை நேரில் சந்தித்து எங்களது நோக்கத்தைத் தெரிவித்துள்ளோம். வர்த்தக வளாகம் கட்டுவதற்கு பதிலாக நடிகர் சங்கம் மற்றும் கலை அரங்கம் கட்ட வேண்டியது முக்கியம். மதுரையிலும் நடிகர் சங்க கட்டடம் கட்டுவோம். நாடக நடிகர்களுக்காக தமிழ்நாடு முழுவதும் பல  இடங்களில் நாடக அரங்கம் கட்ட திட்டமிட்டிருக்கிறோம். இவ்வாறு விஷால் கூறினார்.