வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 10 அக்டோபர் 2023 (10:31 IST)

சூரி படத்தின் பட்ஜெட் இவ்வளவு கோடியா? ஆச்சர்யத்தில் கோலிவுட்!

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றி படமாக அமைந்த திரைப்படம் எதிர்நீச்சல் திரைப்படம். அந்த படத்தை இயக்கியவர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான துரைசெந்தில்குமார். அதன் பின் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து காக்கிச் சட்டை திரைப்படத்தை இயக்கினார். அதன் பின்னர் கொடி மற்றும் பட்டாஸ் ஆகிய படங்களை இயக்கினார்.

இப்போது அவர் சூரி நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்த படத்துக்கு கருடன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்குக் கதையை இயக்குனர் வெற்றிமாறன் எழுதியுள்ளார். இந்த படத்தில் சூரியுடன் முக்கிய வேடத்தில் சசிகுமார் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் இப்போது தேனியில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் 40 கோடி ரூபாய் என தகவல் பரவி, கோலிவுட்டை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. சூரி நடித்த விடுதலை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதையடுத்து அவரின் மார்க்கெட் இவ்வளவு உயர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது.