சூரி நடிக்கும் ‘மாமன்’ படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்…!
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவைக் கலைஞராக இருந்த சூரி வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் மூலம் ஹீரோவானார். அந்த படம் ஹிட்டானதைத் தொடர்ந்து அவர் நடித்த கருடன் மற்றும் கொட்டுக்காளி ஆகிய திரைப்படங்களும் வெற்றிபெற்று அவரை முன்னணிக் கதாநாயகன் ஆக்கின.
அதன் பிறகு சூரி, தற்போது பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் கதாநாயகன் ஆக நடித்து வருகிறார். இந்த படத்தின் கதைக்கருவை சூரி தன்னுடைய சொந்த வாழ்வில் நடந்த சம்பவத்தில் இருந்து எடுத்து அதை கதையாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
அந்த கதைக்கு பிரசாந்த் பாண்டியராஜ் திரைக்கதை அமைக்க சூரியுடன் ஐஸ்வர்யா லஷ்மி, பாபா பாஸ்கர் மற்றும் ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். கருடன் படத்தைத் தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் குமார் இந்த படத்தையும் தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸாகி கவனம் பெற்றுள்ளது. சூரி தன்னுடைய சகோதரி மகனை மடியில் வைத்துக்கொண்டு காதுகுத்திக் கொள்வது போல நகைச்சுவையாக வடிவமைக்கப்பட்டுள்ள போஸ்டர் வெளியாகி, படம் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் ரிலீஸாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.