1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 9 ஆகஸ்ட் 2017 (23:35 IST)

முதல் படத்திலேயே நான் அஜித்தை கலாய்ச்சவன்: சூரி

நடிகர் சூரி சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தான் திரையுலகிற்கு எந்த அளவு கஷ்டப்பட்டு நுழைந்தேன் என்பதையும், முதல் படத்திலேயே அஜித்தை கலாய்த்தது குறித்தும் மனம் திறந்து பேசினார்.



 
 
லிங்குசாமி இயக்கத்தில் அஜித் நடித்த 'ஜி' படத்தில் இரண்டு காட்சிகளில் தான் நடித்ததாகவும், அந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்தவரின் அடியாளாக நடித்த சூரி, படப்பிடிப்பில் ஒரு காட்சியின்போது அஜித்தை கலாய்த்ததாகவும் கூறினார்.;
 
ஒரு பெரிய ஹீரோவான அஜித் தன்னை கலாய்த்ததை சாதாரண எடுத்து கொண்டு தன்னுடைய நடிப்பை பாராட்டியதாகவும், லிங்குசாமி அப்போதே தன்னை 'நீ பெரிய ஆளாக வருவாய்' என்று வாழ்த்தியதாகவும் கூறினார்
 
மேலும் சினிமாவில் இன்று வெற்றிகரமாக இருப்பதற்கு சுசீந்திரன் கொடுத்த புரோட்டா சீன் தான் காரணம் என்றும் அவரை தான் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்' என்றும் கூறினார்.