சனி, 28 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 21 மே 2024 (07:19 IST)

சூரியின் கருடன் படத்தின் டிரைலர் & ஆடியோ லான்ச் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக நடித்து வந்த சூரியை வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக ஆக்கினார். அந்த படத்தை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதை அடுத்து சூரி தொடர்ந்து கதாநாயகனாகவே சில படங்களில் நடித்து வருகிறார்.

விடுதலை 2 மற்றும் கொட்டுக்காளி ஆகிய படங்களை முடித்த சூரி  அடுத்து நடிக்கும் கருடன் படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கி முடித்துள்ளார். இந்த படத்துக்குக் கதையை இயக்குனர் வெற்றிமாறன் எழுதியுள்ளார். இந்த படத்தில் சூரியுடன் முக்கிய வேடங்களில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் மற்றும் சசிகுமார் நடித்துள்ளனர். இதனால் படத்தின் பட்ஜெட் அதிகமானதாக சொல்லப்பட்டது.

இந்த படம் மே 31 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் இன்று மாலை இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீடு நடக்க உள்ளது. இதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.