1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (15:16 IST)

ஊடகங்கள் மீது நடிகை சோனியா அகர்வால் பாய்ச்சல்: என்ன காரணம்?

நேற்று பரபரப்பாக வைரலான ஒரு செய்திக்கு தன்னுடைய புகைப்படத்தை தவறாக பயன்படுத்திய ஊடகங்கள் மீது கடும் கண்டனங்களை நடிகை சோனியா அகர்வால் தெரிவித்துள்ளார் 
 
நேற்று கன்னட நடிகை சோனியா அகர்வால் உள்பட 3 பேர் போதைப்பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தியை ஒரு சில ஊடகங்கள் பதிவு செய்தபோது தமிழ் நடிகை சோனியா அகர்வால் புகைப்படத்தை பயன்படுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இது குறித்து நடிகை சோனியா அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில் ’குறிப்பிட்ட அந்த செய்தியில் என்னுடைய புகைப்படத்தை பயன்படுத்தியதால் என் குடும்பத்தாருக்கும் எனக்கும் பெரும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. ஏகப்பட்ட போன் அழைப்புகள் இதனால் எனக்கு வந்தது. ஊடகவியாளர்கள் என்னுடைய புகைப்படத்தை தவறாக பயன்படுத்தியதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். மேலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றும் கூறியுள்ளார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது