1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: புதன், 5 ஜூலை 2017 (15:41 IST)

அம்மா ஆனார் கவர்ச்சி நடிகை சோனா!

அம்மா ஆனார் கவர்ச்சி நடிகை சோனா!

தன்னுடைய கவர்ச்சியான நடிப்பாலும், பேச்சாலும் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சோனா. இவர் தற்போது படம் ஒன்றில் நடிகைக்கு அம்மாவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.


 
 
கவர்ச்சியில் தாராளம் காட்டும் நடிகை சோனா சில படங்களை தயாரித்து தோல்வியடைந்து பின்னர் சில படங்களில் சிறு வேடங்களில் நடைத்து வந்தார். தன்னைப்பற்றி சுய சரிதை எழுதப்போவதாக கூறிய சோனா அதில் பல பரபரப்பி தகவல்கள் இடம்பெறும் எனவும் கூறியிருந்தார்.
 
இந்நிலையில் ஊடக வெளிச்சம் இல்லாமல் இருந்த நடிகை சோனா படம் ஒன்றில் அம்மாவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏ.எம்.ஆச்கர் எழுதி இயக்கும் இந்த படத்துக்கு நான் யாரென்று நீ சொல் என பெயர் வைத்துள்ளனர்.
 
இந்த படத்தில் ஹீரோயினுக்கு அம்மாவாக நடிக்கும் சோனாவை வைத்து தான் கதை நகர்வதாக கூறப்படுகிறது. சென்னை, பொள்ளாச்சி, கேரளா என இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. விரைவில் வெளிவர உள்ள இந்த படம் கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.