செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinojkiyan
Last Updated : புதன், 27 நவம்பர் 2019 (20:07 IST)

பெண்கள் பற்றி அவதூறு ; பாக்யராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை !

சமீபத்தில் , ’கருத்துகளை பதிவு செய்’ என்ற சினிமா பட இசை விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் பாக்யராஜ்,  மேடையில் பேசும்போதும, பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் பெண்களின் பலவீனத்தை சிலர் தவறாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும், இந்தக் குற்றங்களுக்கு ஆண்கள் மட்டுமே காரணமல்ல; பெண்களிடமும் தவறு உள்ளது  என பேசியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பாக்யராஜ் இவ்வாறு பேசியுள்ளதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. மேலும் ஆண்கள் இரண்டாம் மணம் செய்து கொள்வது பற்றியும் நியாயப்படுத்தும் வகையில் பாக்யராஜ் பேசியுள்ளதற்கு பலர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், ஆந்திர ஆணையத் தலைவி வசி ரெட்டி பத்மா என்பவர், தமிழக மகளிர் ஆணையத்துக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், இயக்குநர் பாக்யராஜ், ஒருசில சம்பவங்களை சுட்டிக் காட்டி ஒட்டுமொத்த மகளிர் இனத்தையும் அவமதிக்கும்  வகையில் பேசியுள்ளதற்கு சட்ட ரீதியாக  நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.