கேலிக்குள்ளாகும் சிவக்குமார் பொண்டாட்டி பாடல்!
ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள சிவக்குமாரின் சபதம் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சிவகுமார் பொண்டாட்டி என்ற பாடல் வெளியாகியது.
இசையமைப்பாளராகவும் பாடகராகவும் இருந்த ஆதியை ஹீரோவாக வைத்து சுந்தர் சி மீசைய முறுக்கு, நட்பே துணை மற்றும் நான் சிரித்தால் ஆகிய படங்களைத் தயாரித்தார். இதில் மீசைய முறுக்கு திரைப்படத்தை ஆதியே இயக்கினார். அதையடுத்து அவர் இப்போது அன்பறிவு எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை பழம்பெரும் நிறுவனமான சத்யஜோதி தியாகராஜன் தயாரித்துள்ளார்.
அதையடுத்து ஆதி நடிக்கும் படத்தையும் அதே நிறுவனமே தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு வித்தியாசமான தலைப்பாக சிவக்குமாரின் சபதம் என்று பெயர் வைத்துள்ளாராம் ஆதி. ஆதியின் படங்கள் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் இந்த படத்தின் மீதும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இப்போது இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சிவக்குமார் பொண்டாட்டி என்ற பாடல் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியுள்ளது.
ஆனால் வெளியானதில் இருந்தே இந்த பாடலின் நடனம், இசை மற்றும் பாடல் வரிகள் இணையத்தில் கேலிக்கு ஆளாகி வருகின்றன.