1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 14 டிசம்பர் 2024 (09:05 IST)

சென்னையில் பிரம்மாண்ட செட்.. இன்று தொடங்கும் சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்!

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருந்த புறநானூறு திரைப்படம் சூர்யாவின் தலையீட்டால் கைவிடப்பட்டது.  அந்த கதை இந்தி திணிப்பு எதிர்ப்பைப் பற்றிய படம் என்பதால் அதில் நடிக்க சூர்யா தயங்கியதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் சூர்யா நேரடி இந்திப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் அதே கதையை சிவகார்த்திகேயனை வைத்து டான் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக சுதா கொங்கரா இயக்க உள்ளார். அது சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கான போட்டோஷூட் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் கடைசி நேரத்தில் அந்த போட்டோஷூட் கைவிடப்பட்டது.

இந்நிலையில் இன்று முதல் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளது. சென்னையில் உள்ள பின்னி மில்லில் ஒரு கல்லூரி செட் அமைக்கப்பட்டு ஷூட்டிங் நடத்தப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் 1960 களில் நடப்பது போன்ற ஒரு பீரியட் படம் என்பது குறிப்பிடத்தக்கது.