1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : வெள்ளி, 21 அக்டோபர் 2022 (07:52 IST)

சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ ரிலீஸ்: கொண்டாடும் ரசிகர்கள்!

prince
சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ்’ திரைப்படம் இன்று அதிகாலை 5 மணி காட்சி வெளியாகிஉள்ளதை அடுத்து ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர் 
 
சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் இயக்கத்தில் தமன் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பிரின்ஸ்’ 
 
இந்த படம் அக்டோபர் 21ஆம் தேதி அதாவது இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இன்று அதிகாலை 5 மணிக்கு ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் முதல் காட்சி சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வெளியாகி உள்ளது 
 
இந்த படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் திரையரங்குகளில் கூடியுள்ளனர். மேலும் இந்த படம் குறித்த விமர்சனங்களை சமூக வலைதளங்களில் அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
‘பிரின்ஸ்’ திரைப்படம் ஜாலியான ரொமான்ஸ் மற்றும் காமெடி படம் என்றும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva