செவ்வாய், 25 ஜூன் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : செவ்வாய், 9 மார்ச் 2021 (16:46 IST)

சிவகார்த்திகேயனின் ’டாக்டர்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

சிவகார்த்திகேயன் நடித்த மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமான ’டாக்டர்’ திரைப்படம் வரும் 26 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தேர்தல் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் இது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது
 
இந்த அறிக்கையில் வரும் மார்ச் 26 ஆம் தேதி ’டாக்டர்’ படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தேர்தல் காரணமாக இந்த ரிலீஸ் தேதி சரியானதல்ல என்று முடிவு செய்திருப்பதால் ரிலீஸ் செய்து ஒத்திவைக்கப்படுகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் சரியான வேலை செய்து குறித்த முறையான அறிவிப்பு வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து வரும் மார்ச் 26 ஆம் தேதி படம் ரிலீஸ் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது