1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Sivakarthikeyan in ayalaan released in diwali

சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் நடித்து வந்த ‘அயலான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் ரகுமான் இசையில் உருவாகி வந்த திரைப்படம் அயலான். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததாகவும் தற்போது கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே தீபாவளி தினத்தில் தனுஷின் ’கேப்டன் மில்லர்’ கார்த்தியின் ’ஜப்பான்’ ஆகிய படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சிவக்கார்த்திகேயன் ‘அயலான்’ திரைப்படமும் அன்றைய தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
அல்ட்ரா மாடர்ன் பொண்ணாக கலக்கும் அதிதி ஷங்கர்!