புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 16 ஜூன் 2017 (07:01 IST)

குற்றாலத்தில் சிவகார்த்திகேயன் - சூரி! ஒரே கொண்டாட்டம்தான்

சிவகார்த்திகேயன் நடித்து வந்த 'வேலைக்காரன்' படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இன்று முதல் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. பொன்ராம் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா முதன்முதலில் நடிக்கவுள்ளார்



 


வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய தொடர் வெற்றிக்கு பின்னர் இந்த படம் ஹாட்ரிக் வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இன்று முதல் 30 நாட்களுக்கு தென்காசி, குற்றாலம், செங்கோட்டை மற்றும் கேரள எல்லைகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. தற்போது குற்றாலத்தில் சீசன் தொடங்கிவிட்டதாலும் இந்த படப்ப்பிடிப்பில் சிவகார்த்திகேயனுடன் சூரியும் இணையவுள்ளதாலும் குற்றாலத்தில் ஒரே கொண்டாட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது