திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: சனி, 12 ஆகஸ்ட் 2017 (16:25 IST)

மறுபடியும் நயன்தாரா… அடம்பிடிக்கும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த படத்தில், ஹீரோயினாக நயன்தாராவையே ஒப்பந்தம் செய்ய சொல்கிறாராம்.
 



ஒரே பாடலில் பணக்காரனாவது போல, ஒரே ஜம்ப்பில் உயரே போய்விட்டார் சிவகார்த்திகேயன். உயரே போவது முக்கியமல்ல, அதைத் தக்கவைத்துக் கொள்வதுதான் முக்கியம் என்பதை நன்றாகவே உணர்ந்திருக்கிறார். அதனால்தான், நயன்தாரா, சமந்தா என உச்சத்தில் இருக்கும் ஹீரோயின்களை தனது ஜோடியாக்கி வருகிறார்.

‘வேலைக்காரன்’ படத்தில் நயன்தாராவை ஜோடியாக்கிய சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன் இயக்கும் படத்திலும் அவரையே ஜோடியாக நியமிக்குமாறு அடம் பிடிக்கிறாராம். காரணம், நயன், சமந்தா, கீர்த்தி சுரேஷ் என ஒருசில நடிகைகளே முன்னணியில் இருக்கின்றனர். அவர்களுடன் நடித்தால் தான் தானும் முன்னணியிலேயே இருக்கலாம் என கணக்குப் போட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.